நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபகாலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் மலையாளத்தில் வெளியான மரைக்கார் என்கிற வரலாற்று படத்தில் கூட வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், சமீப காலமாக நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நடித்து வந்தேன். ஆனால் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க வேண்டாம், ஒரே நேரத்தில் நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும் என்றும் எந்த படம் எப்போது ரிலீஸாகும் என தெரியாததால் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்கலாம் என காத்திருப்பது திரையுலக பயணத்தில் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்று கூறினார். அதைத் தொடர்ந்தே தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதுபோல ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய நான் நடித்த வேழம் என்கிற படம் இந்த வருடம் தான் வெளியானது என்று கூறியுள்ளார் அசோக்செல்வன்.