மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து காசேதான் கடவுளடா பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான கேங்க்ஸ்டா நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. சீண்டுனா சிரிப்பவன், சுயவழி நடப்பவன் என்ற வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஷபீர், விவேகா எழுதிய இந்த பாடலை ஷபீர், ஜிப்ரான் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியான 21 மணிநேரத்தில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.