நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் விஜய் சொன்ன குட்டிக் கதைகள் இப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் சொன்ன 'சாக்லெட்க் கதை அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.
அவர் சொன்ன கதை வருமாறு: ஒரு குடும்பத்தில அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் தன் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சி தனக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு மறுநாள் சாப்பிட நினைப்பார். ஆனால் தங்கை அந்த சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டு விடுவார்.
ஒரு நாள் தங்கச்சி அண்ணன்கிட்ட அன்புன்னா என்னனு கேட்கும் போது, நீ எடுப்பனு தெரிஞ்சும் நான் அதே இடத்துல திரும்ப, திரும்ப சாக்லேட் வைக்கிறேன்ல அதுக்கு பேரு தான் அன்பு. அன்பு மட்டுமே உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே என்பது உலகின் மிகப்பெரிய ஆயுதம். என்றார்.
வாரிசு விழாவிற்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் கைகுலுக்கி வணக்கம் சொல்வதை போல அவர்களுக்கும் சொல்லி சென்றார்.
“கடந்த பல ஆண்டுகளாக தந்தையை பிரிந்து வாழும் விஜய், அவர் சொன்ன அன்பு கதையை அவர் தனக்கே திருப்பி சொல்லி தனது பெற்றவர்களுடன் அன்பை செலுத்த வேண்டும்” என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.