மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை விழாவிற்கு மாவட்ட வாரியாக விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். என்றாலும் நுழைவுச்சீட்டு இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் முன்பு கூடினார்கள்.
அதையடுத்து நுழைவு வாயில் கதவுகள் திறக்கப்பட்ட போது போலீசார் நுழைவு சீட்டை ரசிகர்களிடத்தில் கேட்டார்கள். அப்போது நுழைவுச்சீட்டு இல்லாத ரசிகர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டுவிட்டு அரங்கத்திற்குள் ஓடினார்கள். இந்த தள்ளு முள்ளுவில் சில ரசிகர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று வாரிசு இசைவிழா நடப்பதற்கு முன்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விஜய் மக்கள் மன்றத்திலிருந்து ரசிகர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் பல ரசிகர்கள் அந்த பாஸை 4000 முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.