நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் வெற்றி பெறும் பல படங்கள் அவ்வப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் கூட தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற வாமனன் என்கிற படமும் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என அதன் இயக்குனர் ஏபி பினில் தற்போது தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். த மேன் வித் ஷேடோ என்கிற டேக் லைனுடன் ஹாரர் திரில்லராக இந்தப்படம் வெளியாகி இருந்தது. இந்திரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஒரு பிரபல நடிகர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குனர் ஏபி பினில் கூறியுள்ளார்.