நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ‛மாயி' சுந்தர்(வயது 50) இன்று(டிச., 24) உடல்நலக் குறைவால் காலமானார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் சுந்தர். மாயி படத்தில் நடித்ததன் மூலம் ‛மாயி' சுந்தர் என அறியப்பட்டார். தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(டிச.,24) அதிகாலை 2:45 மணிக்கு காலமானார். சுந்தர் திருமணம் ஆகாதவர். சொந்த ஊரில் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
ஒரே படத்தை சேர்ந்த மூன்று பேர் மறைவு
இம்மாதம் துவக்கத்தில் தான் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலம் குன்றி மறைந்தார். இப்போது அதே படத்தில் நடித்த மற்றொரு நடிகரான ‛மாயி' சுந்தரும் காலமானார். கடந்தாண்டு கொரோனா பிரச்சனையால் இந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகரான நிதீஷ் வீராவும் மரணம் அடைந்தார். ஒரே படத்தில் நடித்த மூன்று நடிகர்கள் மறைந்தது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.