இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. படத்தின் எடிட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு படத்தின் நீளம் இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த நீளத்தைத்தான் படத்தின் இயக்குனர் வம்சி இறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இரண்டே முக்கால் மணி நேரப் படங்கள் என்றாலே பார்ப்பதற்கு நீண்ட நேரம் இழுப்பது போல் இருக்கும் என்ற பேச்சு எப்போதுமே உண்டு. ஆனால், இந்த 2022ல் வெளிவந்து அதிக வசூலைப் பிடித்த 'பொன்னியின் செல்வன்' படம் 2 மணி நேரம் 47 நிமிடங்களும், 'விக்ரம்' படம் 2 மணி நேரம் 53 நிமிடங்களும் நீளம் கொண்ட படங்கள்தான். படம் நன்றாக இருந்தால் படத்தின் நீளம் பற்றி ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிலும் விஜய் படம் என்பதால் படத்தின் நீளத்தை ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்களே தவிர அதைக் குறையாக நினைக்க மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இதனிடையே, இன்று இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.