அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தனது தந்தையான நடிகர் விஜயகுமார், தனது மகன் அர்ணவ் விஜய் ஆகியோருடன் இணைந்து ஓ மை டாக் என்ற படத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். இந்த படம் கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதையடுத்து அருண் விஜய் நடித்த சினம் படத்தையும் அவரது தந்தையான நடிகர் விஜயகுமார்தான் தயாரித்திருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் டுவிட்டர் பக்கத்தில் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், எனது தந்தை வீட்டில் நலமாக இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி என்று தனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு தந்தை விஜயகுமாருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை யும் பகிர்ந்து உள்ளார் அருண் விஜய்.