அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பூவே பூச்சூடவா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் எஸ் .வி .சேகர். அதன் பிறகு காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதோடு அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும் சில சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார் எஸ்.வி.சேகர். இப்படியொரு நிலைகள் தற்போது எஸ்.சி.சேகர், வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலருக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதாவது உடல் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக பலரும் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோல் தான் எஸ்.வி. சேகரும் சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்துள்ளார் எஸ்.வி.சேகர். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒரு பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவு தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்து வரும் நபர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.