அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மோனிஷா என் மோனலிசா என்ற படத்தில் அறிமுகமானவர் மும்தாஜ். அதன் பிறகு விஜய் நடித்த குஷி மற்றும் சாக்லேட் உள்பட பல படங்களில் நடித்தார். குறிப்பாக, விஜய்யுடன் குஷி படத்தில் அவர் நடனமாடிய கட்டிப்புடி கட்டிப்புடிடா மற்றும் சாக்லேட் படத்தில் நடனமாடிய மல மல போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. அதன் பிறகு பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றார் மும்தாஜ். இந்நிலையில் தற்போது மெக்காவிற்கு புனித பயணம் சென்றுள்ள மும்தாஜ் அங்கிருந்தபடியே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நான் தற்போது மெக்காவில் இருக்கிறேன். அனைவருக்கும் அங்கு தான் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இந்த பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு நான் வந்திருப்பதால் என்னுடைய உற்சாகத்திற்கு அளவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு அனைவரையும் காப்பாற்றுங்கள். நான் செய்த தவறுகள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை தாருங்கள் என்றும் கண்ணீர் மல்க இறைவனிடம் வழிபாடு நடத்தி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராமில் மும்தாஜ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.