ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவத். குறைவான சினிமாவில் நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கானவர்களை பின்தொடர வைத்திருப்பவர். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறவர். விதவிதமான இடங்களுக்கு சென்று விதவிதமான ஆபாச உடைகள் அணிந்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடுவார். இதன் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். பல வழக்குகளும் இவர் மீது உள்ளது.
இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள உர்ஃபி அங்கு பொதுமக்கள் கூடும் இடத்தில் அனுமதி இன்றி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதுவும் ஆபாச உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உர்ஃபி இந்திய பிரஜை என்பதால் இந்திய காவல்துறையுடன் கலந்து பேசிய பிறகே அவர் மீது கைது நடவடிக்கை இருக்கும். தற்போது விசாரணை வளையத்திற்குள் மட்டுமே இருக்கிறார். இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டாலோ, அல்லது உர்ஃபி எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டாலோ அவர் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.