ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்பு ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த ஆண்டு 'தி ஆர்ட்டிஸ்' என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார்.
இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக 12 செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான வடிவமைத்துள்ளனர். இது குறித்து புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறும்போது “கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த ஆர்டிஸ்ட் சமர்ப்பணம். பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இதற்காக நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் பணம் காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும்” என்கிறார்.