அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று கட்டி வருகிறார். சுமார் 100 கோடி மதிப்பில் இந்த பங்களா உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் எழுந்தது. உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் இது குறித்து புகார் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛1994ம் ஆண்டின் பஞ்சாயத்து சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டட பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமான மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படக்கூடாது என்று விதிமுறை இருந்தும் அரசு அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கட்டட பணிகளை கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து வரும்போது இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது எதிர்ப்பு அதிகரித்தவுடன் கண்துடைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.