அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ். கிருஷ்ணர் வேடத்தில் அதிகம் நடித்ததால் ஆந்திர மக்களால் கடவுளாகவே பார்க்கப்பட்டவர். ஆந்திர மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் நகரில் என்.டி.ராமராவின் உருவச்சிலை வைக்கப்பட இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலதிபரும் முன்னணி தயாரிப்பாளருமான டிஜி விஸ்வ பிரசாத் என்டிஆர் சிலையை வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதற்கு எடிசன் நகர மேயர் சாம் ஜோஷி ஒப்புதல் அளித்துள்ளார். இவர் எடிசன் நகரில் இந்திய வம்சாவளியின் முதல் மேயர் ஆவார். அமெரிக்காவில் பொது இடத்தில் அமைக்கப்படும் முதல் என்டிஆர் சிலை இதுவாகும்.