இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். ‛பேட்மேன்' வரிசை படங்களை எடுத்து அசத்தியவர். ‛இன்சப்சன்', இன்டர்ஸ்டெல்லர், டன்கிரீன் போன்ற வித்தியாச படைப்புகளை தந்த இவர் கடந்த 2020ல் ‛டெனட்' என்ற படத்தை எடுத்திருந்தார். தற்போது ‛ஆபன்ஹெய்மர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இயற்பியல் விஞ்ஞானி ஆன ஜே.ராபர்ட் ஆபன்ஹெய்மரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் அணு ஆயுதம், டிரினிட்டி சோதனையை தலைமை ஏற்று இவர் தான் நடத்தினார். 1940 காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்து இந்த படம் உருவாகிறது. அவரது வேடத்தில் கில்லியன் மர்பி நடித்துள்ளார். அவருடன் எமிலி பிளன்ட், ராபர்ட் டவுனி ஜூனியர், மேட் டேமன், ரமி மலேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இதன் முதல் டிரைலர் வெளியாகி உள்ளது.
முதன்முதலில் மிகப்பெரிய அணு ஆயத சோதனை நடத்தப்படுவது, அதற்காக ஆபன்ஹெய்மர் உட்பட விஞ்ஞானிகள் குழு தயாராவது. அந்த சோதனையை நடத்த முயல்வது ஆகியவற்றை தொடர்புப்படுத்தி இந்த டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான 6 மணிரேத்தில் 2.7 மில்லியனுக்கு அதிகமானபேர் பார்த்துள்ளனர். அடுத்தாண்டு ஜூலை 21ல் உலகம் முழுக்க படம் வெளியாவதாகவும் டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.