ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சுதந்திர போராட்ட வீராங்கணை ஜான்சி ராணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழக்கை படத்தில் நடித்தார். தற்போது அவர் எமெர்ஜென்ஸி என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இது முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்று படமாகும்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை பார்லிமென்ட்டில் படமாக்க கங்கனா திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கேட்டு அவர் பார்லிமென்ட் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எமெர்ஜென்சி காலத்தில் பல முக்கிய முடிவுகளை இந்திரா எடுத்தார். அந்த காட்சிகளை பார்லிமென்ட்டில் படமாக்கினால்தான் உயிரோட்டமாக இருக்கும் அதற்கு அனுமதி தரவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.
பொதுவாக பார்லிமென்ட்டில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பதில்லை. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கங்கனாவுக்கு அனுமதி கிடைக்காது என்கிறார்கள். என்றாலும், அனுமதி கிடைக்காத பட்சத்தில் சம்பந்தபட்ட இடங்களை மட்டும் படம்பிடித்து அதனை புளூமேட் முறையில் காட்சிகளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.