நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா 'தசை அழற்சி' நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் உடல்நிலை காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கிறது.
இந்த நிலையில் சமந்தா தனது குணாதிசயங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், ‛எனக்கு கோபம் வரும்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று கண்டபடி உடற்பயிற்சி செய்வேன். உடனே கோபம் தணிந்து விடும். நான் பணம், பெயர் புகழுக்காக அலைய மாட்டேன். பணம் எனக்கு முக்கியம் இல்லை. நடிப்புதான் முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசிக்கிறேன். செய்யும் வேலையை நேசிக்க முடியாதபோது அதில் எந்தவித சந்தோஷமோ அல்லது பிரயோஜனமோ இருக்காது. எனக்கு நானே பெரிய விமர்சகி.
நம் தவறுகளை நாம் தெரிந்து கொள்ளும்போதுதான் தொழிலில் முன்னேற முடியும். காலம் நமக்கு சாதகமாக இல்லாதபோது நமக்கு எதுவும் கைகூடாது. அந்த சமயத்தில் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன். யோசிப்பதை விட்டுவிட்டு தூங்கி விடுவேன். உனக்கு பிடித்தது போலவே நீ இரு. நீ இந்த பூமியின் மீது வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்கோ அல்ல. நமக்கு இருப்பதையே நாம் இஷ்டப்பட ஆரம்பித்தால் தேவையானவை எல்லாம் நம்மை தேடி வரும்' எனக் கூறினார்.