நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரில் இரண்டு போதை பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் அப்போது பல சினிமா பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு இப்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தெலுங்கானா சட்டசபை உறுப்பினர் பைலட் ரோகித் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போதை கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங்கை இணைத்து செய்திகள் வந்தபோது கடுமையாக கோபம் அடைந்தார் என்பதும், என்னை பற்றி அவதூறு பரப்பும் மீடியாக்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று அப்போது அவர் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.