நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமா நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். எமோஷ்னல், பிளாக்மெயில், எதார்த்தமான நடிப்பு என தந்திரமான வில்லனாக வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்து வருகிறார். அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக செய்துவிட முடியாது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது சகோதர சகோதரிகளை செண்டிமெண்ட்டால் எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்யும் மகாநடிகன் குணசேகரனுக்கு நிஜ வாழ்வில் அழவே தெரியாதாம். இதுகுறித்து மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறிய போது, 'என் அப்பா செத்தப்ப கூட மனசுல வருத்தம் இருந்துச்சு. ஆனா அவர் அவரோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிட்டாரு. எல்லோரும் ஒருநாள் போகத்தான் போறோம்ங்கிற உண்மைய நிலைய புரிஞ்சிக்கிட்டவன் நான். அதனால் எதுக்குமே அழுகுறதே இல்லை. சீரியல்ல கூட க்ளிசரினை ஊத்தித்தான் அழுகுறேன்' என கூறியுள்ளார்.