நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வந்த இந்தியன்-2 படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார் நடிகர் கமல். இயக்குனர் ஷங்கரும், ராம்சரண் படத்தையும் இந்தியன் 2 படத்தையும் மாறி மாறி இயக்கி வருகிறார். இந்தநிலையில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டன. அப்போது மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலை முன்பாக தனது இந்தியன் தாத்தா கெட்டப்பில் நின்றபடி கமல் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கமல் கூறும்போது, “25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியன் படத்தில் அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவ படையில் பணியாற்றிய வீரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.