நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் டில்லியில் 17வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதுதொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது : ‛‛சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். அதிலிருந்து அவர் மீண்டு வர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் கடும் வேதனைக்கு உள்ளானது.
அந்த சம்பவத்திற்கு பின் என்னை யாராவது கடந்து சென்றால் என் மீதும் ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தால் யாரேனும் முகம் தெரியாத நபர்கள் என்னை கடந்து சென்றால் முகத்தை மூடிக் கொள்வேன். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுமாதிரியான குற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.