நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரையில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்த தாய் முத்துசெல்வம் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூட்டனின் மூன்றாம் விதி', உதயா நடித்த 'ஆவிகுமார்' ஆகிய படங்களை இயக்கியவர் தாய் முத்துசெல்வம். சினிமா கைக்கொடுக்காத நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார்.
'கல்யாணம் முதல் காதல்வரை' 'மெளன ராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' என பல ஹிட் சீரியல்களை கொடுத்து சின்னத்திரையில் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். தற்போது அவர் இயக்கி வரும் 'ஈரமான ரோஜாவே 2' தொடரும் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் முத்துசெல்வம், நுரையீரலில் ஏற்பட்டு தொற்றுக்காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய் முத்துசெல்வத்தின் மரணத்தால் ஒட்டுமொத்த சின்னத்திரையும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.