போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
1980களில் கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறவர் அபிநயா. சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினை பெற்றவர். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
அபிநயாவின் சகோதரர் சீனிவாசன் மனைவி லட்சுமி தேவியை அபிநயாவும், சீனவாசன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கடந்த 2002ம் ஆண்டு லட்சுமிதேவி வழக்கு தொடர்ந்தார். அபிநயா உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை அபிநயா உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும் சீனிவாஸ் உள்பட 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பெங்களூரு மாவட்ட கோர்ட்டில் அபிநயா மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த கோர்ட்டு, 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லட்சுமி தேவி மற்றும் அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், பெங்களூரு மாவட்ட கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தும், கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது. அதன்படி அபிநயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், செல்வராஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அபிநயாவின் சகோதரர் சீனிவாஸ் இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது. அபிநயா தீர்ப்பை ஏற்று சிறைக்கு செல்வாரா? அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாரா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்