மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் நிலையில், நேற்றைய தினம் மீண்டும் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மீண்டும் சந்தித்தார் விஜய். அப்போது கருப்பு நிற பேண்ட், சட்டையில் ஸ்டைலிசாக வந்திருந்தார். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் இடத்தில் ஆலோசித்த விஜய், ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்ததோடு அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார்.
குறிப்பாக மாற்றுத்திறனாளி ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட விஜய், ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை குழந்தை போன்று தனது கைகளில் தூக்கி வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த நவம்பரில் விஜய் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்திக்க வந்த போது அவரது கார் கண்ணாடிகளில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக சொல்லி மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நேற்றைய தினம் விஜய் ரசிகர்களை சந்திக்க வந்தபோது அவரது காரில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு நிற ஸ்டிக்கர் நிறம் மாற்றப்பட்டிருந்தது. இதை வெளிப்படுத்தும் வகையில் நேற்று விஜய் வந்த காரின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள்.