நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவி பிரபலமான ரித்திகா, அந்த தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ரித்திகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாரட்டுகள் கிடைத்து வருகிறது. ரித்திகாவிற்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது ரித்திகாவும் அவரது கணவரும் ஜாலியாக மாலத்தீவுக்கு சென்று ஹனிமூனை எஞ்சாய் செய்து வருகின்றனர். இதுதொடர்பிலான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு ரித்திகா விலகப்போவதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் சீரியல் குழுவினரோ, ரித்திகாவோ வெளியிடவில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் ரித்திகாவின் போர்ஷன் சீரியலில் குறைக்கபட்டுள்ளது. எனவே, அவர் சீரியலில் தொடர்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.