நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகை எனப் பெயர் வாங்கிய ராஷ்மிகா மந்தனா தமிழில் அடுத்ததாக 'வாரிசு' படத்திற்காகக் காத்திருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்தப் படம் மூலம் அவர் இங்கு இன்னும் பிரபலமாகலாம்.
ஹிந்தியிலும் இந்த வருடம் 'குட்பை' படம் மூலம் அறிமுகமானார் ராஷ்மிகா. ஆனால், அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. அடுத்து அவர் நம்பிக்கையுடன் நடித்து வந்த படம் 'மிஷன் மஞ்சு'. ஆனால், அப்படக்குழுவினர் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட முடிவு செய்து ராஷ்மிகாவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளனர். 2023 ஜனவரி 20ம் தேதி அந்தப் படம் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனால், தனது மூன்றாவது ஹிந்திப் படமான 'அனிமல்' படம்தான் பாலிவுட்டைப் பொறுத்தவரையில் ராஷ்மிகாவுக்கு ஏதாவதொரு திருப்புமுனையைத் தர வேண்டும். தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கி சந்தீப் வங்கா ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள்.