அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமா உலகில் திறமையான நடிகர்களில் ஒருவர் என குறுகிய காலத்தில் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் அவருக்கு நற்பெயரை அதிகமாக பெற்றுத் தரவில்லை.
அதிலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடித்தார் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தப் படத்தில் 'டிஎஸ்பி' கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் இல்லாத விதத்தில் அவரது உடல் தோற்றமும் சற்றே குண்டாக இருந்ததையும் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் 'மிரர் செல்பி' ஒன்றை விஜய் சேதுபதி பதிவிட்டிருந்தார். உடல் இளைத்து செம பிட்டான, இளமையான தோற்றத்தில் இருககிறார் விஜய் சேதுபதி. அவரது பதிவிற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் விஜய் சேதுபதி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.