நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நயன்தாரா நடித்த மாயா என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய இவர் தற்போது மீண்டும் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதேசமயம் இந்த படத்திற்கு முன்னதாக அவர் எஸ்ஜே சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த அந்த படம் சில காரணங்களால் எப்போது ரிலீசாகும் என்பது தெரியாமல் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுபற்றி தற்போது அஸ்வின் சரவணன் கூறும்போது, “அந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. தயாரிப்பாளரும் படத்தை பார்த்து அவர்களுக்கும் திருப்தி தான். ஆனால் என்ன காரணத்தினால் இந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் எந்த ஒரு தனி மனிதரையும் குற்றம் சுமத்த முடியாது. இவ்வளவு நீண்ட நாட்களாக காத்திருப்பது மிகுந்த வலியை தருகிறது. ஆனால் என்றேனும் ஒருநாள் இந்த படம் தன்னுடைய பார்வையாளர்களை தேடி திரைக்கு வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.