நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், மலையாள சினிமாக்களில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் சீனியர் நடிகை ரேவதி சமீபகாலமாக இந்த இரண்டு மொழிகளிலும் அதிக படங்களில் நடிக்கவில்லை.. காரணம் அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வந்தார். கஜோல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட இளம் செஸ் விளையாட்டு வீரன் ஒருவனை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ரேவதி.
அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் இந்த கதையை சொன்னதற்காக ரேவதிக்கு பாலிவுட்டில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியும் ரேவதிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது, “பெண் இயக்குனர்களுக்கு மட்டுமல்ல.. ஆண் இயக்குனர்களுக்கும் ரேவதி ஒரு உற்சாக தூண்டுகோலாக இருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.