நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை வீஜே சித்ரா மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து மீடியாவில் புகழோடு வாழ்ந்து மறைந்தார். அவரது மரணத்தை இன்று வரை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 9ம் தேதி சித்ராவின் இரண்டாமாண்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி சித்ராவின் தோழியும் சின்னத்திரை நடிகையுமான சரண்யா துராடி நேர்காணல் ஒன்றில் சித்ராவின் மரணம் தற்கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், சித்ராவுக்கும் தனக்குமான நட்பை விளக்கி கூறிய சரண்யா, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் சித்ரா மிகவும் சோகமாக இருந்ததாகவும் அதுகுறித்து தன்னிடம் கூறியதாகவும் கூறுகிறார். அவர் கூறியதிலிருந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் போதே சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் பிரச்னை உருவாகியிருக்கிறது. குறிப்பாக சீரியலில் முல்லை கதாபாத்திரம் கதிர் கதாபாத்திரத்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது பிரச்னை பெரிதாகியிருக்கிறது.
என்னால் சமாளிக்க முடியவில்லை. கணவர் (ஹேம்நாத்) கோபப்படுகிறார், என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று சரண்யாவிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். மேலும், சித்ரா இதுபோன்று இன்னும் பல விஷயங்களை மறைத்து வெளியில் சிரித்தபடியே இருந்தார் எனக்கூறி சரண்யா துராடி அந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார்.