100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
2022ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டின் பிரபல நடிகர்கள் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகர் பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த ஆண்டு நடிகர் தனுஷின் புகழ் உச்சகட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் ஆலியா பட் உள்ளார். 3-வது இடத்தில் ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் ராம் சரண், 5-வது இடத்தில் சமந்தா, 6-வது இடத்தில் ஹிருத்திக் ரோஷன், 7-வது இடத்தில் கியாரா அத்வானி, 8-வது இடத்தில் ஜூனியர் என்.டி. ஆர், 9-வது இடத்தில் அல்லு அர்ஜூன், 10-வது இடத்தில் யஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் இடம் பிடித்த டாப் 10 நட்சத்திரங்களில் 6 பேர் தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, மோகன் லால், மம்முட்டி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் இடம்பெறவில்லை.