நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற கதையை தழுவி உருவாகும் படம் ரத்தசாட்சி. இந்த படத்தை வசந்தபாலன் உதவியாளர் ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாவீத் ரியாஸ் இசை அமைத்துள்ளார். கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரித்துள்ள இந்த படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வில் படம் பற்றி இயக்குனர் ரபிக் இஸ்மாயில் கூறியதாவது: ஜெயமோகன் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக்க ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.
இந்த படத்தின் கதையும், வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் கதையும் ஒன்று என்கிறார்கள். அது தவறானது, ஒரு போலீஸ் அதிகாரிக்கும், ஒரு நக்சலைட்டுக்கும் இடையிலான கதை என்கிற ஒரு விஷயம் தவிர மற்ற எல்லாமே தனித்தனியானது. இந்த கதையின் களமும், கருத்தும் வேறு, அந்தக் கதையின் களமும் கருத்தும் வேறு.
ஜெயமோகனின் 'கைதிகள்' சிறுகதை ஒரு திரைப்படத்திற்கு போதுமான சம்பவங்களை கொண்டிருக்கவில்லை. அதனால் மேலும் சில கதாபாத்திரங்களையும், அவர்களுக்குரிய சம்பவங்களையும் சேர்த்து இந்த படத்தை உருவாக்கி உள்ளேன். ஆயுதத்தால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது, என்று அமைதியை பேசுகிற படம். ரத்தசாட்சி என்று டைட்டில் வைத்திருந்தாலும் படம் பேசுவது அமைதி புரட்சியைத்தான்.. என்றார்.