மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக தயாராகி உள்ள படம் ‛விழித்தெழு'. ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை சிஎம். துரை ஆனந்த் தயாரித்துள்ளார். கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ, பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். நல்லதம்பி இசையமைத்துள்ளார். இனிய கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: தொழில்நுட்ப புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சவுகரியத்தையும், வசதியையும், நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.
இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள். அதனால்தான் அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கத் தமிழக அரசு முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் 'விழித்தெழு'. இன்றைய சூழலில் அனைவரது வாழ்க்கையிலும் இணையதள மோசடியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைத் தட்டிக் கேட்கும் விதமாக விழித்தெழு படம் உருவாகியுள்ளது. என்றார்.