நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து அவர்களது கூட்டணியில் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட படம் ராம். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களே நடைபெற்றிருந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது.
ராம் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் அதன்பிறகு படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. அதன்பிறகு இவர்கள் கூட்டணி திரிஷ்யம்-2, டுவல்த் மேன் ஆகிய படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்து வெற்றியும் பெற்றனர். இந்த நிலையில் ராம் படத்தின் ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பாக முடித்து வருகின்றார் ஜீத்து ஜோசப்.
அந்தவகையில் தற்போது மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மொராக்கோ கிளம்பி சென்றுள்ளனர் மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும். அங்கே 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அங்கிருந்து துனிசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த இருக்கின்றனர். இந்த ஷெட்யூலுடன் ராம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தெரிகிறது.