இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர். இவர் வெயில், பூ, முத்துக்கு முத்தாக, பாண்டி, கொம்பன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அமலாபால் அறிமுகமான 'வீரசேகரன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது வெளியாகி உள்ள டிஎஸ்பி படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்தாலும் நடிப்பும், கலையும் எனது இரு கண்கள் என்கிறார் வீரசமர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நான் பிறந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் அய்யனார்குளம் கல்கொண்டம்பட்டி கிராமம். அப்பா கிட்டப்பா, அம்மா பாலம்மாள். பாப்பாப்பட்டி, உசிலம்பட்டி அரசுப் பள்ளிகளில் படித்தேன். ஊரில் இருக்கும் போது சினிமா என்றால் நடிகர்கள் முகம் தான் ஞாபகம் . அனைவரும் சென்னை வருவது நடிப்பது என்பதை ஒரு கனவாகவே நினைப்பார்கள். அப்படி சினிமா நடிகர்களின் முகங்கள் மூலம் தான் சினிமா எனக்குள் அறிமுகமாகி உள்ளே நுழைந்தது.
எனக்கு ஓவியம் கலை என்று ஆர்வம் இருந்ததால் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தேன். குறிப்பாக சிற்பக் கலையில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதையே பிரதான பாடமாக எடுத்தேன். ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகு சினிமா பற்றி புரிதலும் தெளிவும் எனக்கு ஏற்பட்டது. நாம் போக வேண்டிய பாதை கலை இயக்கம் என்று தோன்றியது.
ஓவியக்கல்லூரியில் படித்த போதே கலை இயக்குநர் சாபுசரில் அவர்களிடம் அறிமுகம் ஏற்பட்டு, படித்து முடித்ததும் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவரிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் முதன் முதலில் ஆர்ட் டைரக்ஷன் செய்த படம் தான்' காதல்'. அன்று முதல் இன்று டிஎஸ்பி வரை தொடர்ச்சியாகக் கலை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறேன். முதலில் என்னை தனது 'காதல் 'படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் . அதில் நான் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்து இருப்பேன். அப்படியே தொடர்ந்து எனக்குப் பல படங்களில் நடிப்பு வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டன.
சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞராக எவ்வளவு படங்களில் வெளிப்படுத்தினாலும் வெளியே தெரியாது. ஆனால் படங்களில் முகம் காட்டிய பிறகு நம்மைப் பலருக்கும் தெரிகிறது. அது ஒரு வகையான மகிழ்ச்சி. இருந்தாலும் நான் கலை இயக்கத்தை எந்த நாளும் விட மாட்டேன். அதேபோல நடிப்பு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.