இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இயக்குனர் சிவாவுக்கு பிறகு, அஜித் நடிக்கும் படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனர் ஆகவே மாறிவிட்டவர் எச்.வினோத். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரித்துள்ளார். மஞ்சுவாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படம் குறித்து சில தகவல்களை மனம் திறந்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் வினோத்.
‛‛இந்த படத்தை முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கவே நான் விரும்பினேன், அதற்கேற்ப கதையையும் வடிவமைத்தேன். ஆனால் அஜித் சார் இந்த கதையை கேட்டு வியந்து நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறினார், உடனே நான் படத்தின் தரத்தை உயர்த்திவிட்டேன்.''
“இந்த படம் ஏதோ பேங்க் கொள்ளை பற்றியது என்றும் ஆக்சன் த்ரில்லர் என்றும் சோசியல் மீடியாவில் பலரும் தங்களுக்குத் தோன்றிய கதைகளை கூறி வருகிறார்கள். இந்த படத்திற்காக நாங்கள் பிரத்யேகமாக உருவாக்கிய ஒரு பேங்க் செட்டு தான் இப்படிப்பட்ட யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக இந்த படம் இந்த ஜானரில் தான் இருக்கும் என தீர்மானிக்க முடியாதபடி இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா, இரட்டை வேடங்களில் நடித்துள்ளாரா என்கிற கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்ட போது, “நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்விக்கு நான் ஆமாம் என்று பதில் சொன்னால், உடனே இது இன்னொரு மங்காத்தாவா என அவர்களாகவே வேறுவித கற்பனைக்கு தாவி விடுவார்கள். அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்பது படம் வெளியாகும் வரை மர்மமாகவே இருக்க விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் வினோத்.
கமல், தனுஷ் ஆகியோருக்கு கதை சொல்லியிருப்பதாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு எச் வினோத், "படம் ரிலீசுக்கு முன்னர் இது போன்ற பேச்சுக்கள் வருவது இயல்பு. ஆனால் யோகி பாபுவுக்கு தற்போது ஒரு கதை கூறியுள்ளேன். ஆனால் உறுதி செய்யப்படவில்லை. ஒரு அப்பாவி திருடன்,போலீஸ்காரருக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைக்களம் இது. யோகி பாபு தான் இதில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பார்" என்றார்.