Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விபத்து! சண்டை பயிற்சியாளர் பலி

04 டிச, 2022 - 12:40 IST
எழுத்தின் அளவு:
stunt-master-suresh-killed-during-the-shoot-of-vetrimaaran's-viduthalai-shooting-spot-in-chennai

வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு படமாக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியின்போது எதிர்பாராத விதமாக ரோப் கயிறு அறுந்ததால் அதில் தொங்கிக்கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகன் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி!மகன் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட ... எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டேன்: ராஷ்மிகா வெளிப்படை எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)