ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றவர் தெருக்குரல் அறிவு. இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி ரெய்டு' பாடலின் மூலம் பிரபலமானார். தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு தற்போது தான் காதலில் விழுந்ததை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள பதிவில் "என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.