மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன்(65) மாரடைப்பு காரணமாக கும்பகோணத்தில் காலமானார்.
லக்ஷமி மூவி மேக்கர்ஸ் சார்பில் சுவாமிநாதன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். ‛‛அரண்மனை காவலன், மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மச் சக்கரம், பிரியமுடன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம்'' உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஏராளமான படங்களை விநியோகமும் செய்துள்ளனர். கடைசியாக சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் படத்தை தயாரித்தார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார்.
சில ஆண்டுகளாக படங்கள் தயாரிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் முரளிதரன். இந்நிலையில் கும்பகோணத்தில் வசித்து வந்த முரளிதரன் மாரடைப்பு காரணமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் வட்டத்தில் குறிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.