நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் பிரபாஸ் தன்னுடன் பழகும் நட்சத்திரங்களுக்கு எவ்வாறு விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் பேட்டியில் கூறியுள்ளனர். இப்போது நடிகர் சூர்யாவின் முறை. ஆம் ஐதராபாத்தில் பிரபாஸ் நள்ளிரவு வரை காத்திருந்து தனக்கு விருந்தளித்த அந்த இன்ப அதிர்ச்சியான நிகழ்வு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சில நாட்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படமும் பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிராஜக்ட் கே படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் அருகருகேதான் நடைபெற்று வந்தன. அப்போது சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினம் இரவு விருந்துக்கு வருமாறு அழைத்திருந்தார். சூர்யாவும் வருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் மாலை 6 மணிக்கு துவங்க வேண்டிய படப்பிடிப்புக்கு தாமதமாக துவங்கி, படப்பிடிப்பு முடியவே இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகி விட்டதாம்.
இனிமேல் விருந்துக்கு செல்வது எப்படி என்று யோசித்த சூர்யா, தன்னை ஹோட்டலுக்குத்தானே பிரபாஸ் வரச்சொல்லியிருக்கிறார், எப்படியும் ஹோட்டல் உணவு தானே சாப்பிட போகிறோம், அதனால் இன்னொரு நாள் அவருடன் சாவகாசமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து, அதை அவரிடம் நேரிலேயே சொல்லி விடலாம் என அந்த ஹோட்டலுக்கே சென்றுள்ளார்.
ஆனால் சூர்யா வரும் வரை சாப்பிடாமல் காத்திருந்த பிரபாஸ் அங்கே சூர்யாவுக்காக ஸ்பெஷலாக தனது வீட்டிலிருந்து தனது அம்மாவின் கைப்பக்குவத்தில் சுவையான பிரியாணியை செய்து கொண்டு வந்திருந்தாராம். அந்த நேரத்திலும் அவரை அமர வைத்து பிரியாணி பரிமாற அப்படி ஒரு சுவையான பிரியாணியை தான் சாப்பிட்டதே இல்லை” என்று வியந்துபோய் அந்த பேட்டியில் கூறியுள்ளார் சூர்யா.