நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியத் திரையுலகத்தில் அதிகம் கவனிக்கப்படாத திரையுலகமாக கன்னடத் திரையுலகம் இருந்து வந்தது. அது 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் வரும் வரையில் தான். அதன்பின் கன்னட சினிமாவை பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலைக் கடந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதற்கடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா' படமும் வசூல் சாதனையைப் புரிந்துள்ளது. மொத்தமாக 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் 'கேஜிஎப் 2' வசூலை முந்தியதாக கன்னட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கேஜிஎப் 2' வசூலித்த 160 கோடி தான் இதுவரையில் கர்நாடகாவில் ஒரு கன்னடப் படத்திற்கான அதிக வசூலாக இருந்துள்ளது. அதை 'காந்தாரா' 170 கோடி வசூலித்து முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாம். மற்ற தென்னிந்திய, ஹிந்தி மொழிப் படங்களை விடவும் 'கேஜிஎப் 2, காந்தாரா' படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.