நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்பு பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுன் கொடி, அதர்வாவுடன் தள்ளிபோகாதே படங்களில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு இங்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் பிஸியாக நடித்து முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
தற்போது அவர் ஏற்கெனவே வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்கு படமான டிஜே தில்லு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் சித்து ஜோன்னலசட்டா நாயகனாக நடித்து வந்தார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் சித்து - அனுபமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இருவரையும் சமாதானப்படுத்த இயக்குனர் முயன்றும் முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.. இருவரும் கோபமாக படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி உள்ளனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு படத்திலிருந்து விலகிய அனுபமாக தான் பெற்றிருந்த முன்பணத்தையும் தயாரிப்பாளருக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அனுபமா நடிக்க இருந்த கேரக்டரில் மடோனா செபஸ்டின் நடிக்க இருக்கிறார்.