நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சமீபத்தில் சிரித்து வாழ வேண்டும் என்ற படம் டிஜிட்டலில் வெளிவருவதை தியேட்டரில் விழாவாக கொண்டாடினார்கள். இதேபோல மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் 50 வது ஆண்டு விழாவை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடினார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
கடந்த 1972ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் சிவாஜி, ஜெயலலிதா மனோரமா, உள்ளிட்ட பலரும் நடித்தனர். மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. கிராமப்புற வாழ்க்கையின் மகிமையை நகரத்து நாயகிக்கு நாயகன் புரிய வைப்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.