மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் யுத்த சத்தம். எழில் இயக்கி உள்ள இந்தப் படத்தில் சாய்பிரியா தேவா, ரோபோ சங்கர், வையாபுரி மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார்.
படத்தின் கதை இதுதான் : காவல்துறை அதிகாரியான கதிர்வேலன் (பார்த்திபன்) சிறிய ஓய்வுக்கு பிறகு பணிக்கு மீண்டும் திரும்புவதிலிருந்து கதை தொடங்குகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வழக்கு அவர் கைக்கு வருகிறது. கொலை செய்யப்பட்ட பெண் உளவியலாளராகவும், துப்பறியும் நிபுணராகவும் இருக்கும் நகுலனின் (கவுதம் கார்த்திக்) காதலி. கவுதம் கார்த்திக்தான் கொலையாளி என்று பார்த்திபன் துரத்த, கவுதம் கார்த்திக் உண்மையான குற்றவாளியாக துரத்த... இறுதியில் என்ன என்பதே படத்தின் கதை.
திகிலூட்டும் விதத்தில் நடத்தப்பட்ட ஒரு கொலை சம்பவத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, கொலையாளியை கண்டறிவதற்காக முற்படும் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஒரு துப்பறியும் நிபுணரின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் இசையின் மர்மச் சுவையோடு திரைக்கதை சித்தரிக்கிறது.
இந்த படம் டிசம்பர் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.