மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே…' பாடல் இம்மாதத் துவக்கத்தில் யு டியுபில் வெளியிடப்பட்டது. தற்போதும் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்தப் பாடல் இதுவரையில் 73 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கான 'ரஞ்சிதமே….' தெலுங்குப் பாடல் நாளை நவம்பர் 30 காலை 9 :09 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கில் ராமஜோகையா சாஸ்திரி இப்பாடலை எழுத அனுராக் குல்கர்னி, மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.
தமிழில் இப்பாடல் ஹிட்டானதைப் போல தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தனது குடும்பத்தினருடன் லண்டனில் உள்ள மாமியார் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் கொண்டாட விஜய் செல்ல உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.