ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கண்ணத்தாள் திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த சூனா பானா கதாபாத்திரம் இன்றளவும் பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும், வடிவேலு விஷம் அருந்தும் காட்சியில் 'விஷம் அப்படித்தான்னே' இருக்கும் என வடிவேலுவுக்கே டப் கொடுத்த குரலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அவர் தான் அந்த படத்தின் இயக்குநர் பாரதி கண்ணன். ஒருகாலத்தில் கண்ணத்தாள், ஸ்ரீ பண்ணாரியம்மன், ராஜ ராஜேஸ்வரி என வரிசையாக பக்தி படங்களாக எடுத்து குவித்து வந்தார்.
தற்போது சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கி 'பாண்டவர் இல்லம்', 'எதிர்நீச்சல்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் 'சூனா பானா கதாபாத்திரம் என்னுடைய மாமா தான். அவர் உண்மையாகவே ஒரு திருடர். உண்மையான சூனா பானா தேங்காய் திருடும்போது மரத்திலிருந்து விழுந்து செத்துப்போய்விட்டார்' என அந்த கதாபாத்திரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெட்டி ஒட்டப்பட்டு ரீல்ஸ் வீடியோவாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.