நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்தனர். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனாலும், தமிழிலும் தடம் பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு', தனுஷ் நடிக்கும் 'வாத்தி' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள்தான். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகும் 'ஆர்சி 15', வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் 'கஸ்டடி' ஆகிய படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியான 'லவ் டுடே' படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்றே நாளில் 7 கோடி வரை வசூலித்து படம் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களைத் தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம்.