மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ராதே ஷ்யாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ளார். தனது ஒவ்வொரு பேட்டியிலும் இந்த படம் குறித்து பேசும்போதெல்லாம் பிரபாஸ் மீதான தனது நெருக்கத்தை வெளிப்படையாகவே கூறி வருகிறார் கிர்த்தி சனோன். இதுகுறித்து சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் பிரபாஸை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு பேட்டியில், “ஆதிபுருஷ் படப்பிடிப்பின்போது பிரபாஸ் எனக்கு தெலுங்கு டீச்சராக இருந்து தெலுங்கு கற்றுக் கொடுத்தார்.. அவருக்கு நான் ஹிந்தி கற்றுக் கொடுத்தேன்” என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல ஹிந்தியில் கிர்த்தி சனோனுடன் படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ள வருண் தவான் ஒரு பேட்டியில் கூறும்போது, கிர்த்தி சனோன் வாழ்க்கையில் சமீபகாலமாக ஒரு உயரமான இளவரசன் நுழைந்துள்ளார் என கூறியுள்ளார். அந்த இளவரசன் பிரபாஸ் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரபாஸ் குறித்து கிர்த்தி சனோன் சீரியசாக தான் பேசி வருகிறாரோ என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நட்பாகத்தான் பழகி வருகிறோம் என கூறி வருவதால் பிரபாஸின் வாழ்க்கையில் அனுஷ்காவிற்கு இடமில்லை என்கிறபோது அந்த வெற்றிடத்தை கிர்த்தி சனோனாவது நிரப்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.