100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் தனது திரையுலக பயணத்தை விறுவிறுப்பாக துவங்கியுள்ளார் நடிகர் கமல். தடைப்பட்டு நின்று போய் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியானது. இந்த படத்தை கமல், மணிரத்னம் இருவரும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.
அதேசமயம் இயக்குனர் வினோத்தின் டைரக்சனிலும் கமல் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தியும் ஓடிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படம் முடிவடைந்ததும் மணிரத்னம் - கமல் படம் துவங்கப்படுமா என சமீபத்தில் உதயநிதியிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, ‛‛மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். அந்த படம் முடிந்த பின்பே மணிரத்தினம் படத்தில் கமல் நடிப்பார் என ஒரு புது தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக சில பிரபலங்கள் தங்களது படங்களை பற்றி கட்டிக்காக்கும் விஷயங்களை, தெரிந்தோ தெரியாமலோ உதயநிதி போகிற போக்கில் தெரியப்படுத்தி ரசிகர்களுக்கான அப்டேட்களை கொடுத்து வருகிறார் என்பதால் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.