மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளிலிருந்து தன்னைத்தானே பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் வகையில் தற்பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டையிடுவது, கத்தி பேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என அதிகாரத்தால் மட்டுமே இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். மற்றபடி டாஸ்க்குகளில் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்வதில்லை.
அசீமை பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி 'அட்டக்கத்தி','வெறும் வாய் சவுடால்' என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் தன்னை தமிழ் பற்று மிக்கவராக காட்டிக்கொள்ளும் அசீம் அண்மையில் தப்பு தப்பாக தமிழ் எழுதி சிக்கிகொண்டார். தற்போது மீம்கிரியேட்டர்ஸ்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். உண்மையான அசீமின் குணமே இப்படித்தானா? அல்லது பொய்யாக விளையாடுகிறாரா? என ரசிகர்களே குழம்பி போய்விட்டனர்.
இந்நிலையில், அசீமின் சக நடிகரான அருண் குமார் ராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 'அசீமுடன் 'பூவே உனக்காக' தொடரில் நடித்திருக்கிறேன். அவர் உண்மையான முகமே இதுதான். பெண்களை எப்போதுமே டாமினேட் செய்வார். ஒருமுறை அந்த சீரியலில் நடித்த ஹீரோயினை தகாத வார்த்தையால் திட்டிவிட்டார். அதனால், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே அசீம் மன்னிப்பு கேட்டால் தான் வேலை செய்வோம் என்று சொல்லிவிட்டனர். தயாரிப்பாளர் வற்புறுத்தி கேட்டுகொண்டதால் மட்டுமே அசீம் அன்று மன்னிப்பு கேட்டார். சீரியலில் வரும் வசனத்தில் கூட ஒரு பெண் தன்னை 'டா' போட்டு கூப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்' என்று அதில் கூறியுள்ளார்.